Posted by: அஞ்சலி | March 22, 2007

சுடர் கிடைச்சுது!

எனக்கு சுடர் கிடைச்சுது!!

படம். நன்றி www.flickr.com

அம்மா சொன்னா இந்த blogs எழுதிறவை ஒரு சுடர் விளையாட்டு விளையாடுகினம். என்னையும் அதுக்கு பெயரிலி மாமா கூப்பிட்டிருக்கிறார் எண்டு. எனக்கு அது முதல் விளங்கேல்லை. பிறகு அம்மா விளங்கப்படுத்தினா. Olympic torch ஒராள் இன்னொரு ஆளிட்டை குடுத்து கொண்டு போற மாதிரி, இது கேள்விகள் கேட்டு பதில் சொல்லுறதாம். என்னையும் இந்த விளையாட்டுல சேத்த பெயரிலி மாமாவுக்கு நன்றிகள்.

(அஞ்சலிக்கு சில கேள்விகளின் அர்த்தம் முழுமையாக புரியாததால், கேள்விகளை கொஞ்சம் எளிமைப் படுத்தி கேட்க வேண்டி இருந்தது. அத்துடன், ஒரு வரியில் பதில் முடிந்து விடாமல் இருக்க, கேள்வியின் உள்ளேயே, சில உப கேள்விகளும் கேட்க வேண்டி இருந்தது. பெயரிலி தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்தானே? …. அஞ்சலியின் அம்மா).

1. எதிர்காலத்திலே எத்துறையிலே நீங்கள் ஈடுபடவேண்டுமென விரும்புகின்றீர்கள்? அதற்கு அம்மா, அப்பா என்ன சொல்கின்றார்கள்?

(நீங்க பெரிய ஆளா வந்த பிறகு என்னவா வர விரும்புறீங்கள்? என்ன படிச்சு எப்படி வரப் போறீங்கள்?)
எனக்கு scientist ஆ வர விருப்பம். அது space scientist ஆ வர விருப்பம்.

(ஏன் அது உங்களுக்கு விருப்பம்?)
எனக்கு space பற்றி தெரிய நல்ல விருப்பம். Stars, moon, மற்ற planets பற்றியெல்லாம் படிக்க விருப்பம். Space க்கு போகவும் விருப்பம். என்னட்டை ஒரு space model இருக்குது. என்ரை படிக்கிற மேசையில அது வச்சிருக்கிறன். அப்பா எனக்கு அடுத்த Birthday க்கு, ஒரு பெரிய telescope வாங்கித் தாறதா சொல்லியிருக்கிறார். அது நாங்க கடையில பாத்து வைச்சிருக்கிறம். அதுக்குள்ளாலே Stars, moon எல்லாம் கிட்ட பாக்கலாம்.

(வேறை என்ன இதைப் பத்தி சொல்லப் போறீங்க?)
Pluto வை planets list ல இருந்து remove பண்ணியிட்டாங்களாம். அது size சின்னதா இருக்கிறதால, அதை stone மாதிரி எண்டு சொல்லியிட்டாங்களாம். நான் அப்பாட்டை கேட்டன் “scientists உம் பிழை விடலாம்தானே? அப்பிடியெண்டா, சிலவேளை pluto திருப்பியும் planet ஆ வரலாம்தானே?” எண்டு. அப்பா, அப்பிடியும் நடக்கலாம் எண்டு சொன்னார்.

(சரி, உங்கட இந்த விருப்பத்துக்கு அம்மா, அப்பா என்ன சொல்லுகினம் என்று அந்த மாமா கேட்டிருக்கிறார்.)
அம்மா, அப்பாக்கும் விருப்பம்தான், நான் என்ன படிக்க விருப்பமோ, படிக்கலாம் எண்டு சொல்லியிருக்கினம். ஆனால் அம்மாக்கு நான் space க்கு போனால் பயமாம். தூரப் போறதால பயமாம். அம்மா சொன்னதுக்கு நான் சிரிச்சன்.

2. உங்கள் வகுப்பு நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? நீங்கள் அவர்களைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

அவையளுக்கு என்னைப்பத்தி, என்ரை hobbies, interests பத்தி தெரிய விருப்பம். என்ரை life பத்தி தெரிய விருப்பம். நான் holidays க்கு போற இடம், Sri Lanka பத்தி எல்லாம் தெரிய விருப்பம்.

எனக்கும் அவையளிடை life, hobbies, interests பத்தி எல்லாம் தெரிய விருப்பம்.

(வேறை என்ன உங்களுக்கு அவையளைப் பற்றி தெரிய விருப்பம்?)
என்ரை class ல நிறைய countries பிள்ளையள் இருக்கினம்தானே?

(ஏன் அப்படி எல்லா countries பிள்ளையளும் இருக்கினம்?)
நான் International school க்கு போறதால, என்ரை class ல Japan, India, Germany, Finland, France, Sweeden, Columbia, Argentina, Norway நாட்டு பிள்ளையள் இருக்கினம். நாங்க எல்லா countries பத்தியும் தெரியலாம்.

(ஒவ்வொரு நாடு பற்றி உங்களுக்கு என்ன தெரிய வேணும்?)
அங்க weather எல்லாம் எப்பிடி இருக்கும்? Beach இருக்குமா? அங்க என்ன animals எல்லாம் இருக்கும்? ஆக்கள் எல்லாம் எப்பிடி இருப்பினம்? இதுதான்.

3. தமிழ், நோர்வேஜியன் மொழிகள் இவை ஒவ்வொன்றிலும் உங்களுக்குப் பிடித்த விடயமென்ன? பிடிக்காததென ஏதாவதிருந்தால், அது என்ன?

(தமிழில உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது?)
தமிழில கதை வாசிக்க நல்ல விருப்பம். அது அம்மா, அல்லது அப்பா வாசிச்சு விட்டா விருப்பம். தமிழ் எழுத அவ்வளவு விருப்பமில்லை?

(ஏன் எழுத விருப்பமில்லை? என்ன எழுத விருப்பமில்லை?)
அதுல ல, ழ, ள எல்லாம் எழுத கஷ்டம்தானே? நாங்க கதைக்கிற மாதிரி எழுத ஏலாதுதானே? அதுதான் விருப்பமில்லை.

(சரி, நோர்வேஜியனில என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது?)
அதுல எனக்கு எல்லாம் விருப்பம். எழுதவும், வாசிக்கவும் விருப்பம்தான்.

4. உங்கள் பதிவுகளை நீங்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடவோ அல்லது நோர்வேஜியன் மொழியிலே உங்கள் பதிவினைத் தொடங்கவோ ஆர்வம் உள்ளதா?

(நீங்க உங்கட blog ல எழுதி இருக்கிறதெல்லாம் சேர்த்து ஒரு புத்தகம் மாதிரி செய்ய விருப்பமா எண்டு அந்த மாமா கேட்டிருக்கிறார்)
ஆஆஆ, இது நல்ல idea தான். அப்பிடி book ஆ செய்தா எனக்கு விருப்பம்தான்.

(Norsk ல blog எழுத விருப்பமிருக்கா?)
மட்டும் எனக்கு English ல எழுத விருப்பம். எனக்கு school ல English தானே? அதால அதுதான் easy. அம்மா எனக்கு English ல blog தொடங்கித் தாரதா சொல்லி இருக்கிறா. தமிழ் எண்டால் அம்மாதான் type பண்ணித் தர வேணும். English எண்டா, நானே type பண்ணலாம். எங்கட basketball group girls நாலுபேர் சேர்ந்து இப்ப ஒரு blog தொடங்கி இருக்கிறம். அதுல இன்னும் ஒண்டும் எழுதேல்லை.

5. நோர்வேயின் குட்டிக்கதையொன்றைத் தமிழிலே சொல்லுங்கள்.
எனக்கு டக்கெண்டு ஒரு கதையும் நினைவு வரேல்லை. அம்மா சொன்னா, சகானா அக்காட்டை ஒரு கதையை norsk ல சொல்லச் சொல்லி கேட்டு, என்னை அதை தமிழில சொல்லட்டாம். நேற்று போனில கதை கேட்டு வைச்சேன். இண்டைக்கு school போற வழியில அந்தக் கதை தமிழில அம்மாக்கு சொன்னன். அந்த கதையை இங்க அம்மா எழுதி விடுவா. ரவிசங்கர் மாமா, என்னை ஒரு கதை சொல்லச் சொல்லி comment போட்டிருந்தார். அவருக்கு இந்தக் கதை. :)

ஒரு சின்னப் பிள்ளை இருந்தா. அவவுக்கு அம்மாவும், அப்பாவும் இருந்தினம். ஒருநாள் அம்மா அவவை பாட்டியிட்டை போகச் சொன்னா. பாட்டிக்கு சாப்பாடு கொடுத்து விட்டா. அந்த சின்னப் பிள்ளை காட்டுக்குள்ள போனா. அங்க ஒரு Fox (அதுக்கு தமிழ் நரி) இருந்தது. அது அந்த பிள்ளையை சாப்பிட நினைச்சது. முன்னுக்கு ஓடிப் போய் பாட்டியை cupboard க்குள்ள வைச்சு பூட்டிட்டு, பாட்டி மாதிரி படுத்திருந்தது.

அந்த பிள்ளை பாட்டி வீட்டுக்கு வந்தா. அங்க பாட்டியைப் பார்த்தா, அவ different ஆ இருந்தா. அப்ப அந்தப் பிள்ளை “கண் எதுக்கு உங்களுக்கு பெருசா இருக்கு?” எண்டு கேட்டா. அதுக்கு நரி, “உங்களை நல்லாப் பாக்க”. “காது எதுக்கு உங்களுக்கு பெருசா இருக்கு?” எண்டு கேட்டா. அதுக்கு நரி “நல்லா உங்களை கேக்க” எண்டு சொன்னது. “எதுக்கு உங்களுக்கு பல்லுகள் பெருசா இருக்கு?” எண்டு கேட்டா. “அது உங்களை சாப்பிடத்தான்” எண்டு சொல்லிட்டு எழும்பினது. அந்த பிள்ளை கத்தினா. அப்ப, அங்க ஒரு axe வச்சிருக்கிறவர் வந்து, அந்த நரியை வெட்டி 2 pieces ஆக்கிட்டார். அந்த பிள்ளையும் பாட்டி, அப்பா, அம்மாவோட பிறகு சந்தோஷமா இருந்தா.

(கதைக்கு தலையங்கம் என்ன அஞ்சலி?)
தலையங்கம் எண்டா?

(title என்ன?)
சின்ன சிவப்பு…… ?????? மிச்சம் எப்பிடி தமிழில சொல்லுறதெண்டு தெரியேல்லை. English ல சொல்லட்டா? அது Little Red Riding Hood. இந்த கதை நான் முதலே English ல வாசிச்சிருக்கிறன். சகானா அக்கா சொன்னா இது நோர்வேஜிய கதையாம். Barney ல Baby Bob, Little Yellow Riding Hood ஆ வருவா. ஏனென்டால் அவவுக்கு yellow colour தான் நல்ல விருப்பம்.

*ஆறாவது மேலதிகக்கேள்வி: முடிந்தால், பதில் தரவும்: உங்களிடம் கேட்கப்பட்டிருக்கவேண்டுமென நினைக்கும் கேள்வியெது? அதற்கான பதிலெது?

(உங்களிட்டை அந்த மாமா வேறை ஏதாவது ஒரு கேள்வியும் கேட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்களா?)
ஓம். எதுக்கு நீங்க இந்த blog எழுதுறீங்க எண்டு கேட்டிருக்கலாம்.

(சரி, அதுக்கு உங்கட பதில் என்ன?)
எனக்கு என்னைப் பற்றி மற்றவைக்கு சொல்ல விருப்பம். நான் visit போற இடங்களைப் பத்தியெல்லாம் சொல்ல விருப்பம். நான் படிக்கிறது பத்தியெல்லாம் சொல்ல விருப்பம். வீணை, dance, piano பத்தியெல்லாம் சொல்ல விருப்பம்.
………………………………………………………………………………………………………………………………………….

நான் யாரிட்டை கேள்வி கேக்கிறது எண்டு யோசிச்சன். சகானா அக்காட்டை கேக்க விருப்பம். ஆனா அவ இன்னும் blog எழுத தொடங்கேல்லை எண்டு அம்மா சொன்னா. அப்ப வேறை யாரிட்டை கேக்கலாம் எண்டு யோசிச்சன் திரு அங்கிளிட்டை கேக்கலாம் எண்டு அம்மாட்டை சொன்னன். அம்மாவும் சரியெண்டு சொன்னவ.

திரு அங்கிளிட்டை நான் 5 கேள்விகள் கேக்க போறன். Fire ஐ (சுடரை) இப்ப திரு அங்கிள் எடுப்பார்.

1. நீங்க எதுக்கு blog எழுத choose பண்ணினீங்க?

2. தமிழ் உங்களுக்கு நல்ல விருப்பமா?

3. இந்தியாவில எப்படி இருக்குது? அங்க நிறைய elephants இருக்கா? அங்க நல்ல sunny யா இருக்குமா? நிறைய beaches இருக்கா? உங்களுக்கு இந்தியா நல்ல விருப்பமா? ஹொங்கொங் ல முந்தி இருந்தீங்கதானே? ஹொங்கொங் உம் உங்களுக்கு விருப்பமா?

4. நீங்க என்னோட Sri Lanka க்கு வந்தீங்கதானே? உங்களுக்கு திருப்பியும் என்னோட Sri Lanka வர விருப்பமா? Sri Lanka ல உங்களுக்கு என்ன விருப்பம்?

5. ஐந்தாவது கேள்வி என்ன கேக்கிறது எண்டு நிறைய யோசிச்சன். எனக்கு படுக்கிற நேரமும் வந்திட்டுது. அதால நிறைய யோசிக்கவும் முடியெல்லை. அம்மா சொன்னா, கஷ்டமா இருந்தா பெயரிலி மாமா என்னட்டை கேட்ட கடைசி கேள்வியையே (மேலதிகக் கேள்வி), உங்களிட்டையும் கேக்கச் சொல்லி. அதால அந்த கேள்வியையே கேக்கிறன். உங்களிட்டை வேறை என்ன கேள்வி கேட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்க. அந்த கேள்விக்கு பதிலென்ன?

(ஷ்ரேயா கேட்டிருந்தார் அஞ்சலியின் குரலில் பதிவு செய்து இணைத்திருக்கலாமே என்று. அதை செய்திருக்கலாம்தான். நான் இன்னும் ஒன்றும் அப்படி செய்யாததால் அதற்கு அதிக நேரம் தேவைப்படும். இப்போது சுடர் விளையாட்டில் அதற்கு நேரமில்லை. எனவே செய்ய முடியாமல் போய் விட்டது. தவிர இன்று ஏனோ தமிழ்மணம் கருவிப்பட்டையை காணவில்லை. காரணம் தெரியவில்லை. நான் எந்த மாற்றமும் செய்யவில்லை. கருவிப்பட்டை இல்லாமையால், தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை

:( . ……. அஞ்சலியின் அம்மா)

Responses

  1. //(உங்களிட்டை அந்த மாமா வேறை ஏதாவது ஒரு கேள்வியும் கேட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்களா?)
    ஓம். எதுக்கு நீங்க இந்த blog எழுதுறீங்க எண்டு கேட்டிருக்கலாம்.
    //

    ஆஹா அஞ்சலி

    நல்லா இருக்குது உங்களது பதில்கள்.

    நன்றி.

    சாரா

  2. அஞ்சலி,
    ரவிசங்கரை இப்படி ஏமாத்திட்டீங்களே! இது ரொம்ப அநியாயம்! சரி, இப்போ எனக்கு ஒரு கதை சொல்லுங்க, :)

    திருவுக்கான உங்க கேள்விகளும் நல்லா இருக்கு, முக்கியமா என்னுடைய favourite பற்றி வேற கேட்டிருக்கீங்க ;)

    அடுத்த முறை கதை ஒன்றைப் பேசி பதிவு செய்து போடுங்க அஞ்சலி, உங்க குரல் கேட்க ஆவலா இருக்கு

  3. அழகா சொல்லி இருக்க குட்டிம்மா ,
    அம்மாக்கள் எல்லாம் செல்லப்பிள்ளைங்கள் பக்கத்துலயே
    இருக்கறதத்தான் விரும்புவாங்க.
    அதான் அம்மா ஸ்பேஸுக்கு போறதுன்னதும் பயந்துருக்காங்க.
    ஆறாவது கேள்விக்கு பதில் ம்…
    எங்களுக்கும் ரொம்ப ஆவல் தான்.
    வீணை பியானோ அப்புறம் இன்னும் என்னன்ன வச்சிருக்க திறமை..

  4. //அதுல ல, ழ, ள எல்லாம் எழுத கஷ்டம்தானே? நாங்க கதைக்கிற மாதிரி எழுத ஏலாதுதானே? அதுதான் விருப்பமில்லை.//

    இதற்காக அஞ்சலி அம்மாவுக்கு என் கண்டனங்கள் :) பிள்ளைக்கு நல்லா தமிழ் சொல்லித் தாங்க :)

    இந்த நரிக்கதை எனக்கு முன்னமே தெரியும். அதனால நீங்க இன்னொரு கதை சொன்னாத் தான் சரி. ஆனா, இது நார்வேஜியக் கதைன்னு இன்னிக்குத் தான் தெரியும்

  5. அஞ்சலிக்குப் பதில்களுக்கும் அஞ்சலியின் அம்மாவுக்கு அவற்றைக் கேட்டு வாங்கித் தந்ததற்கும் நன்றி

  6. கலக்கிட்டீங்க, அஞ்சலி!
    /
    அது space scientist ஆ வர விருப்பம்.
    /

    வாழ்த்துக்கள்!!

  7. நல்ல பதில்கள்.

    //மட்டும் எனக்கு English ல எழுத விருப்பம்.//
    :O))

    இதை நான் நோர்வேஜியத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கதைக்கையில் கேட்டிருக்கிறேன். நோர்வீஜியன் மொழியில் சொல்லமைப்பு இப்படித்தான் அமையும் என்பதால் அவர்களுக்குத் தமிழிலும் அப்படியே வருகிறது என்று உணர நிறைய நாள் எடுத்தது. :O)

  8. அன்பு குட்டிம்மாவுக்கு,

    என்னிடம் இவ்வளவு நேசம் கொண்டிருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    உங்களது அறிவான பதில்களையும், மிக உயர்ந்த எதிர்கால விருப்பத்தையும் அறிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி! விண்வெளி விஞ்ஞானியாகும் உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

    உங்கள் இனிய கரங்களிலிருந்து நெருப்பை பெற்றுக்கொள்கிறேன். நாளை இரவு அல்லது சனிக்கிழமை காலையில் எனது பதில்களை பதிவு செய்கிறேன். வேலைப்பழுவின் காரணமாக இந்த காலதாமதம் ஏற்படுவதை பொறுத்துக்கொள்ளுங்கள்.

  9. பதில்கள் ரொம்ப நல்லா இருந்தன. பாராட்டுகள் அஞ்சலி.

    (இது அஞ்சலியின் அம்மாவுக்கு)

    //அதுல ல, ழ, ள எல்லாம் எழுத கஷ்டம்தானே? நாங்க கதைக்கிற மாதிரி எழுத ஏலாதுதானே? அதுதான் விருப்பமில்லை.//

    //தமிழ் எண்டால் அம்மாதான் type பண்ணித் தர வேணும்.//

    இது ரொம்ப வருத்தத்தை தருகிற விசயம்.

    நாலுவரி என்றாலும் அஞ்சலி நேரடியாக தட்டெழுதுவது நலம். ஆரம்பத்தில் தவறுவது சகஜமே..குழந்தையின் தவறுகளும் கூட அழகுதான்.

    அஞ்சலி தட்டெழுதி பெரிய தவறு இருந்தால் மட்டும் நீங்கள் அதைத் திருத்திக் கொடுக்கலாம். அப்படிச் செய்தால் தான் இந்த பிளாக்குக்கே ஒரு அர்த்தம் இருக்கும்.

    இல்லை என்றால் நிரந்தரமாகவே அஞ்சலிக்கு தமிழ் எழுத மடி இருக்கும். பழகப் பழகத்தான் மொழி வசப் படும். அதனால் நாலு வரியோ, ரெண்டு வரியோ அஞ்சலியைக் கொண்டே இந்த பதிவில் எழுதச் சொல்லுங்கள்.

  10. அஞ்சலி – இன்னொரு விசயம், நான் கேட்டது நல்ல பகிடியான கதை. இந்த நரிக்கதையில் பகிடி இல்லை. இன்னொரு நாள் நேரம் கிடைக்கிறப்ப அம்மா கிட்ட சொல்லி எழுதச் சொல்லுங்க.

    சிந்தாநதி – அஞ்சலிக்கு எட்டு வயசு தான். (மூன்றாம் வகுப்பு தான் படிக்கிறாள்!). அதுவும் நார்வேயில் வளர்ற பிள்ளை இவ்வளவு தமிழ் பேசுறதே பெரிய விசயம். அவங்களையே தட்டச்ச சொன்னா அவங்களுக்கு பதிவு, தமிழ் இரண்டு மேலயும் விருப்பம் குறைஞ்சு அது ஒரு சுமையா போயிடும். அவங்க வாரம் ஒரு முறை தமிழ்ப் பள்ளிக்குப் போகும்போதே அவங்க ஆசிரியமார் கிட்ட நல்லா கேட்டுத் தமிழ் படிச்சுக்கிட்டா போதும். தமிழார்வத்த தூண்டுற மாதிரி, தமிழ் மேல் உள்ள தயக்கம், மருட்சி குறையுற மாதி அஞ்சலி அம்மாவும் தமிழ்க் கதைப் புத்தகங்கள் வாங்கித் தரலாம். தாளில் தமிழ் எழுதப் பழகிக் கொண்ட பிறகு தான் கணினியில் தமிழ் எழுத உள்ள தயக்கம் போகும். பெரியவங்களே கணினியில் தமிழ் எழுத சோம்பல் படும் போது சின்ன பிள்ளையிடம் எதிர்ப்பார்க்க கூடாது தானே? ஒரு 12 வயதுக்கு மேல் வரும்போது அவங்க சொந்தமா தன் கைப்பட எழுதலாம்ங்கிறது என் கருத்து. இப்போதைக்கு, அவளைக் குழந்தையாகவே இருக்க விடுவது தான் நல்லது. ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு போட்டா கூட அஞ்சலி அதுக்குன்னு மெனக்கெட்டு பேசுனா, செயற்கையாகப் போயிடும். அவங்க போகுலயே விட்டு அவங்க அம்மா கேட்டு எழுதுறது தான் இப்போதைக்கு நல்லது. அவங்களும் முடிஞ்ச அளவு அஞ்சலியின் பேச்சு நடையிலயே பதிவு எழுதுறது சிறப்பு

  11. எனக்கு பதில் போட்டிருக்கிற, வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்.

    பொன்ஸ் அன்ரி! உங்க favourite என்னெண்டு அம்மாட்ட கேட்டன். உங்கட blog காட்டினா. எனக்கு அது பாத்து உங்கட favourite யானை எண்டு கண்டு பிடிச்சன். எனக்கும் யானை நல்ல விருப்பம்.

    ரவி மாமா! உங்களுக்கு சொல்ல ஒரு பகிடி கதை இருக்கு. :)

    எனக்கு இப்ப தமிழில type பண்ண கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பெரிய ஆளா வந்த பிறகு நான் தமிழில் எழுதுவேன்.

  12. புதுமையான முயற்சி. அஞ்சலியை ஊக்குவித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.

  13. ஹாய் அஞ்சலி… நல்லா எழுதுறீங்க. நீங்க சின்னப்பிள்ளை எண்டு எனக்குத் தெரியாது. இப்பதான் பார்த்தேன். தொடர்ந்து எழுதுங்க. நீங்க இதுக்கு முன்னாடி எழுதுனதையெல்லாம் இப்ப படிக்கப்போறேன். bye..bye..


Leave a response

Your response:

Categories