நான் அண்டைக்கு நடந்து வந்தநேரம் Jingle bells plant (இதுதான் நான் அந்த plant க்கு வைச்ச பேர்) பூ பூக்க தொடங்கி இருந்தது பாத்தன். அம்மாக்கு அதைக் காட்டி, “spring வந்துட்டுது” எண்டு சொன்னன். அம்மா சொன்னா spring எண்டால் தமிழில வசந்த காலமாம். அப்ப நான் “வந்திட்டுது! வந்துட்டுது! வசந்தம் வந்துட்டுது!” எண்டு பாடினன். அம்மா சொன்னா, இதை வைச்சு உங்கட blog ல எழுதலாம் எண்டு.
நேற்று அப்பா எனக்கு Flora எண்ட பெரிய book ஒண்டு வாங்கி தந்தார். அதுல நிறைய plants படங்கள் எல்லாம் இருக்கு. அதுல எல்லா plants பத்தியும் பாக்கலாம், படிக்கலாம். அப்பா கடைக்குப் போனார். நானும் வாறன் எண்டு சொல்லி, நானும் வெளிய போய் அந்த plant எடுத்து வந்து தண்ணிக்குள்ள வைச்சன். அந்த plant ஐ book ல தேடினம். அந்த plant க்கு Norsk ல Snø klokke தான் பேர். அதுக்கு Botanical name, Galanthus nivalis. அதோட English பேர், Snowdrop. ஆனா, அதுக்கு நான் வைச்சிருக்கிற பேர் Jingle bells. அது பூவா வர முதலில, bells மாதிரித்தான் இருக்கும்.
அந்த plant, end of the winter ல பூக்கும். Winter க்கு தமிழில ‘பனி காலம்’ எண்டு எங்கட தமிழ் book ல இருக்கு. இண்டைக்கு morning எங்களுக்கு, குருவி எல்லாம் சத்தம் போட்டது கேட்டுது. அம்மா சொன்னா, Sri Lanka ல இருந்தா, எப்பவும் இந்த சத்தம் கேக்கலாம் எண்டு. இங்க இப்பிடி, spring ல மட்டும்தான் கேக்குது.
வந்துட்டுது, வந்துட்டுது, வசந்தம் வந்துட்டுது.



வாழ்த்துக்கள் குழந்தே…!!!
By: செந்தழல் ரவி on March 8, 2007
at 7:59 am
உங்க வீட்டில வேற என்னென்ன பூ இருக்கு, அஞ்சலி?
By: ரவிசங்கர் on March 8, 2007
at 8:35 am
நல்லா வச்சே பேர் பெல்ஸ்ன்னு…
ஆமாம் ‘வந்துட்டுது வந்துட்டுது வசந்தம் வந்துட்டுது’ன்னு பாட்டெல்லாம் வேற சொந்தமா
எழுதி , பாடி கலக்கறியே …பிரமாதம்..
By: முத்துலெட்சுமி on March 8, 2007
at 10:28 am
எல்லாருக்கும் நன்றிகள்.
எங்கட வீட்டில Rose இருக்கு.
By: அஞ்சலி on March 8, 2007
at 5:44 pm