Posted by: அஞ்சலி | March 8, 2007

அம்மம்மாக்கு!

எண்ட அம்மம்மாக்கு பிறந்தநாள் வருது. அதுக்கு நான் ஒரு card செய்தன். எனக்கு அப்பா cards செய்யுற சாமான்கள் கொஞ்சம் வாங்கித் தந்தார். நான் அதுல அம்மம்மாக்கு பூக்கள் வைச்சு card செய்யலாம் எண்டு நினைச்சன். ஏன் எண்டால், அம்மம்மா is very caring and nice. அதுனால அவவுக்கு பூக்கள் நல்லம்.

அந்த card இங்க இருக்கு.

அம்மா என்னட்டை கேட்டா, நாளைக்கு பெண்கள் தினம். உங்களுக்கு தெரிஞ்ச girls and ladies பத்தி என்ன நினைக்கிறீங்க எண்டு. நான் சொன்னன், அம்மம்மாவும் பாட்டியும் caring. அதுல பாட்டி நல்ல நல்ல நல்ல caring. ஆனால் இப்ப பாட்டி இல்லை. அத்தை ரண்டு பேரும் communicators. அவையள் வீணை, சங்கீதம், dance எல்லாம் சொல்லி குடுக்கிறதால அப்படி. அம்மா thinker. காயத்ரி அத்தை creater. பிறகு எண்ட friends எல்லாம் நல்ல friendly. எண்ட teacher Mrs.Andås, knowledgable.


Responses

  1. அஞ்சலி, உங்கள பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க :) ?

  2. அஞ்சலி, குட்டிப் பொண்ணே உனக்கும் ஒரு பாட்டியின் வாழ்த்துக்கள்.
    நீங்கள் நன்கு வளர்ந்து இன்னும் சாதனை புரிய வேண்டும்.

  3. ரவி மாமா! நான் எல்லாம். ஆனா அதுலே கூட communicator உம் caring உம். அதுல நல்ல நல்ல கூட caring தான். :)

    வாழ்த்துச் சொன்ன பாட்டிக்கு நன்றிகள்.

  4. வாழ்த்துக்கள் அஞ்சலி.

  5. அஞ்சலி!
    அம்மம்மாவில ரொம்ப பாசமா?? இவ்வளவு பெரிய வாழ்த்து அட்டை!!
    நன்று

  6. அஞ்சலிக்குட்டி..! உண்ட கார்டு ரொம்ப நல்லாருக்கு! உன் குட்டித்தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு வ்ருகிறேன். அதுவரை இந்த புது அம்மம்மாவின் வாழ்த்துக்கள்!!!

  7. எல்லோருக்கும், புது அம்மம்மாவுக்கும் நன்றிகள்.

    ஓம், எனக்கு அம்மம்மால நிறைய விருப்பம்.


Leave a response

Your response:

Categories