அண்டைக்கு எனக்கு school leave, Christmas holidays. ஆனா அம்மாக்கும், அப்பாக்கும் வேலை. அப்ப நான் என்ன செய்யலாம் எண்டு யோசிச்சிட்டு அம்மா என்னை தன்னோட வேலை செய்யுற இடத்துக்கு கூட்டிக் கொண்டு போனா. அங்க போய் ஒருநாள் முழுவதும் அம்மாவோட நிண்டு நல்லா enjoy பண்ணினன்.
அம்மா என்னட்ட “அம்மா வேலை செய்யுற lab எப்படி இருக்கு” எண்டு கேட்டா. நான் “நல்லா இருக்கு. நல்ல tidy யா இருக்கு எண்டு சொன்னன்”. அம்மான்ரை lab இதுதான்.
நாங்க போகேக்குள்ள 9 மணியாச்சு. ஆனால் இருட்டாத்தான் இருந்தது. அங்க அம்மாவோட வேலை செய்யுற எல்லாரோடயும் கதைச்சன். வசந்தன் மாமாவும் அம்மா வேலை செய்யுற இடத்துக்கு பக்கத்திலதான் வேலை செய்யுறார். அவரிட்டயும் போனம். அவர் வேலை செய்யுறதும் பார்த்தம். அவர் எனக்கு stickers எல்லாம் தந்தார். எனக்கு stickers நல்ல விருப்பம்.
அம்மா வேலை செய்யுற இடத்துல என்ரை சின்னப் பிள்ளை படங்கள் வைச்சிருக்கிறா. நான் சின்னப் பிள்ளைல (2/3 வயது) வரைஞ்சு குடுத்த படமும் இன்னும் வைச்சிருந்தா. எனக்கு அது எல்லாம் பாக்க நல்ல சந்தோஷமா இருந்தது. எல்லாம் படம் எடுக்க வேணும் எண்டு சொல்லி, அம்மான்ரை mobile phone ல படம் எடுத்தம்.
இது அம்மா என்ரை படமும், நான் வரைஞ்ச படமும் வைச்சிருக்கிற இடம்.
இதுதான் நான் அம்மாக்கு சின்னப் பிள்ளையாய் இருந்த நேரம் வரைஞ்சு குடுத்தது.
இது என்னை ஒண்டு வயசுல, Sri Lanka போயிருந்த நேரம் எடுத்த படம்.
இது என்னை 2 வயசுல எடுத்த படம்.
இது என்னை 3 வயசுல எடுத்த படம்.
இது என்னை 4 வயசுல எடுத்த படம்.
கொஞ்சம் வெளிச்சம் வந்த பிறகு, அம்மான்ரை இடத்துல இருந்து வெளியே பாத்தால் நல்ல வடிவா இருந்தது. அந்த படம் இங்க இருக்கு.
பிறகு அம்மாவும் நானும் canteen க்கு போய் lunch சாப்பிட்டம்.
அம்மா வேலை செய்யேக்கை நான் என்ன செய்யலாம் எண்டு யோசிச்சு books எல்லாம் கொண்டு போனன். நான் படிக்கவும் கொஞ்சம் கொண்டு போனன். அது எல்லாம் முடிச்சுட்டு, இனி என்ன செய்யலாமெண்டு யோசிச்சன். அப்ப எனக்கு ஒரு idea வந்தது. அம்மாக்கு ஏதாவது செய்து குடுக்கலாம் எண்டு யோசிச்சன்.
அப்பா எனக்கு paper boat செய்ய காட்டித் தந்தவர். அது ஒண்டு செய்தன். பிறகு Christmas time எண்ட படியால், Cristmas hat ஒண்டும் கீறினன். அது ரெண்டையும், அம்மாவை பாக்க வேண்டாம் எண்டு சொல்லிட்டு, அம்மா என்ரை படம் போட்டிருந்த சுவரில அம்மாட்டை இருந்த tape எடுத்து ஒட்டி வச்சன். பிறகு அம்மாவை வந்து பாக்கச் சொன்னன். நான் அது எல்லாம் ஒட்டி வைச்ச இடம் இதுதான்.
நான் அம்மாக்கு செய்த boat.
நான் அம்மாக்கு வரைஞ்ச christmas hat.
அம்மாக்கு பாத்துட்டு நல்ல surprise. “Thank you very much kunju. நல்ல வடிவா இருக்கு.” எண்டு சொல்லி hug and kisses தந்தா. அம்மாக்கு சந்தோஷம் எண்டு எனக்கும் நல்ல சந்தோஷம். இனி அது அம்மாட்ட நிறைய நாள் இருக்குமாம். நான் இன்னும் பெரிய ஆளா வந்த பிறகு கூட்டிப் போய் காட்டுறதா சொல்லி இருக்கிறா.
பிறகு நாங்க 4 மணிக்கு வீட்டுக்கு வந்தம். அப்ப திருப்பி இருட்டா போச்சுது.
















அம்ம உனக்கு நல்ல ஃபிரண்டாவும் இருக்காதானே அஞ்சலி
யூ ஆர் வெரி லக்கி
By: கௌசி on January 8, 2007
at 3:03 pm
ஓம் கெளசி ஆண்டி. நானும் அம்மாவும் நல்ல ஃபிரண்ட்ஸ்தான்.
By: அஞ்சலி on January 9, 2007
at 7:47 am
superb post. nalla dedication to amma
By: Kittu on January 10, 2007
at 6:34 am
உன்னோட ஒரு வயசு படம் ரொம்ப நல்லாயிருக்கு..:-)! வாழ்த்துக்கள் அஞ்சலி!
By: சந்தனமுல்லை on January 10, 2007
at 8:41 am
நல்ல வடிவான படங்கள். அம்மாக்கு நல்ல பரிசு குடுத்திருக்கீங்க குட்டிம்மா.
By: திரு on January 10, 2007
at 9:40 am
கெட்டிக் கார பிள்ளை. கொடுத்து வச்ச அம்மா
By: ரவிசங்கர் on January 10, 2007
at 1:00 pm
அன்புள்ள அஞ்சலிக்கு,
உரைநடையும் படங்களும் அருமை. தாங்கள் இலங்கையை சார்ந்தவர் என்று நினைக்கிறேன். உங்களுடைய ஒலிநடையும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.
By: The King of Kings on January 23, 2007
at 11:42 am
எனக்கும்தான் அந்த ஒரு வயசு அஞ்சலி படம் நல்லா பிடித்திருக்கு.
அப்புறம், அந்த நாய் பெய்ர் என்ன என்று சொல்லவில்லையே!
தொடர்ந்து இன்னும் நிறைய எழுதிக்கொண்டு வா.
By: மாசிலா on January 23, 2007
at 1:41 pm
பதில் போட்ட எல்லாருக்கும் நன்றிகள்.
By: அஞ்சலி on January 23, 2007
at 3:08 pm
அன்புள்ள அஞ்சலிக்கு,
உரைநடையும் படங்களும் அருமை. தாங்கள் இலங்கையை சார்ந்தவர் என்று நினைக்கிறேன். உங்களுடைய ஒலிநடையும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.
By: The King of Kings on January 23, 2007
at 7:10 pm
அஞ்சலிமா எப்படி சுகங்கள் , நல்ல இருக்கு உங்களின் கப்பல். அஞ்சலி குழப்படி எல்லாம் செய்விங்களா.
திரு மாமா தமிழ்நாட்டுக்கு வந்த பொழுது பார்த்தவன் உங்கள் சுகங்கள் கேட்டேன்.
வாழ்த்துக்கள்
By: செந்தில் on January 24, 2007
at 3:53 pm
நன்றி செந்தில் அங்கிள். <br /><br />நான் கொஞ்சம் குழப்படி மட்டும்தான் செய்வேன். <br /><br />திரு அங்கிளை உங்களுக்கு தெரியுமா? எனக்கு நல்லாத் தெரியும். அவர் நல்ல அங்கிள். அவர் நீங்க சுகம் கேட்டதை என்னட்டை சொல்ல மறந்திட்டார்.
By: அஞ்சலி on February 1, 2007
at 6:30 am
அம்மாவில் லாபுக்கும் போய் பார்த்து விட்டீர்களா? அம்மாவுக்கு உதவியாக வீட்டிலும் இருக்க வேணும் என அஞ்சலி.
றெனி அங்கிள்
By: றெனிநிமல் on February 5, 2007
at 8:35 pm
அம்மாக்கு நான் நிறைய ஹெல்ப் எல்லாம் செய்வேன்தான்.
By: அஞ்சலி on February 6, 2007
at 8:40 am
Kuttima,
Un blog avalavu arumai, Inimai.
Nee romba nalla varuvada chellam.
Kadavul unnai men melum aasirvathikanum.
I’m sure your parents are very proud of you
By: Devi An on February 24, 2007
at 8:56 am
Wow! Anjali your blog is very good and I was shocked when I saw your profile and really you are a super kid. I appreciate your parents. Keep it up, keep posting I am going to read your blog regularly…
Excuse me, even I am from Tamil Nadu, I really feel ashamed that I am not able to type in Tamil and from today I have started learning Tamil typing.
By: Kaartz on February 28, 2007
at 1:28 pm
அஞ்சலி,
அடுத்த இடுகை எப்போ எழுதப் போறீங்க..அம்மாவ தொல்லை செஞ்சு சீக்கிரம் எழுதிப் போடுங்க
ஒரு நல்ல பகிடியா ஒரு கதை சொல்லுங்க..
ரவி மாமா
By: ரவிசங்கர் on March 1, 2007
at 2:35 pm