Posted by: அஞ்சலி | December 23, 2006

இது நல்ல கை!!

இங்க நான் பிடிச்சு வைச்சிருக்கிற கை ஒரு நல்ல கை. இந்த கைகள்தான் எனக்கு இந்த blog ஐ தொடங்கித் தந்தது. இந்த குட்டித் தோட்டத்தை எனக்கு போட்டுத் தந்த (இப்படி எழுதி தொடங்கித் தந்த) அத்தையை நான் சந்தித்தேன். அவ படம் போட வேண்டாம் என்று சொல்லிட்டா. அதுதான் அந்தக் கையை இழுத்து வைச்சு படம் எடுத்து போட்டிருக்கிறன். அவவை நான் 4, 5 years க்கு முதல் கண்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் இப்ப எனக்கு சரியா நினைவில இல்லை. அந்த அத்தையும் மாமாவும் Australia வில இருந்து வந்தாங்க. ஆனால் ஒரே ஒருநாள்தான் இங்க Bergen ல நிண்டாங்க. அதுதான் எனக்கு கவலை. எங்களோட நிறைய நேரம் நிக்கேல்லை. ஒருநாளில பிறகு லண்டனுக்கு போய்ட்டாங்க. அவவோட நல்லா விளையாடக் கூட இல்லை. இன்னொருதரம் வந்து என்னோட நிறைய நாள் நிக்க வேணும் எண்டு சொல்லி வைச்சிருக்கிறன்.

பி.கு.>அம்மா சொல்லுறா இதுவும் ஒரு வலைப்பதிவர் சந்திப்பாம். :) )

Responses

  1. அந்த அத்தையைத்தான் காணேல்லையெண்டு தேடிக்கொண்டிருக்கிறமெண்டு சொல்லுங்கோ. அவ இங்கிலிஷில மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறதையும் கவனிச்சனான் எண்டும் சொல்லி வையுங்க.

    குட்டி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்த விசயத்தைச் சொன்னதுக்கு நன்றி அஞ்சலி. :)

  2. மதி அன்ரி!<br /><br />நீங்க நினைக்கிற அத்தைதான் நான் சொல்லுற அத்தையா எண்டு தெரியவில்லை. எதுக்கும் அவவிடம் கேக்கிறன்.

  3. நீங்க சொல்லுறதும் சரிதான் ரவி மாமா. :)

  4. அஞ்சலி வணக்கம். புகைப்படத்துல அந்த (மழை)அத்தை பேரையே போட்டுட்டதானே:)

  5. நன்றி அன்பு (அண்ணா/அக்கா)

  6. நம்பி(க்) கை தந்த அந்தக்கைகளுக்கு நன்றி! வலையுலகில் முடிசூடா அரசியாக விளங்க வாழ்த்துக்கள்!


Leave a response

Your response:

Categories