Posted by: அஞ்சலி | December 6, 2006

தமிழ்மணம் பூங்கா இதழ்!!

அம்மா இண்டைக்கு எனக்கு ஒரு விஷயம் காட்டினா. அம்மா இண்டைக்கு தற்செயலா எண்ட பதிவை பூங்கா இதழில கண்டதாவும், பிறகு எல்லா இதழிலயும் தேடினதாவும் அப்ப அதைப் பார்த்ததாவும் சொன்னா.

எண்ட 4 பதிவு அந்த பூங்கா இதழில வந்திருக்கு.

1. முதலாவது இதழில வந்தது – March of the penguins!!
2. அடுத்து வந்தது – அல்பகா(Alpaca)!!
3. இன்னொன்று வந்தது – United Nations Day!!
4. கடைசியா வந்தது – ஒரு காசில்லாத பிள்ளை!!

எண்ட பதிவுகள் இப்படி இதழில வாறது எனக்கு இதெல்லாம் பார்த்து நல்ல்ல்ல்ல்ல்ல்ல சந்தோஷம். நன்றிகள்.

Responses

1. வாழ்த்துக்கள்!!

2. நன்றிகள் சிவபாலன் அங்கிள்.

3. வாழ்த்துக்கள் அஞ்சலி. தொடர்ந்து நல்ல எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

4. வாழ்த்துக்கள் அஞ்சலி. உங்களோட குட்டித் தோட்டத்துல இன்னும் நிறைய பூ பூக்கிறதுக்கும் வாழ்த்துக்கள்

5. அஞ்சலி!
கடுகு சிறிதானாலும் காரம் பெரிதுதான்.
கலக்குங்க!!!! வாழ்த்துக்கள்
OLD IS GOLD என படங்கள் போட்டுள்ளேன் பாருங்கள்;உங்களுக்குப் பிடிக்கும்.
யோகன் பாரிஸ்

6. வாழ்த்துக்கள் அஞ்சலி.. பக்கப் பட்டியில் சுற்றும் கரடி அண்ணன் படு ஜோர்..

7. பூங்காவில், குழந்தைகள் பெற்றோருக்கான விளையாட்டுப் பயிற்சிகளும் வருகின்றன. அம்மாவைப் படிச்சிப் பார்க்கச் சொல்லுங்க..

8. வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்.

அம்மாட்ட அந்த விளையாட்டுப் பயிற்சி பார்க்கச் சொல்லுறேன் பொன்ஸ் ஆன்டி.

9. வாழ்த்துக்கள்…

10. வாழ்த்துக்கள் சின்னப்பிள்ளையே !!!

11. நல்ல பிள்ளை அஞ்சலி, பெருமையா இருக்கு

12. நன்றிகள் குமரன் அங்கிள், ரவி அங்கிள், பிரபா அங்கிள்.

13. வாழ்த்துக்கள் அஞ்சலி.
உங்கள் தோட்டம் வனமாக வேண்டும்.

14. அன்புத்தங்கைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள். யோகன் அண்ணா தனது மின்னஞ்சலில் உங்கள் பதிவுகள் பற்றி கூறியிருந்தார்கள். உடனே பார்க்கவேண்டும் போல தோன்றினாலும் உங்கள் பதிவின் முகவரி கிடைக்காததால் பார்க்க முடியவில்லை. இன்று தற்செயலாய் இந்த அழகிய பூந்தோட்டத்தை காண முடிந்தது. சிறிய வயதில் அழகு தமிழில் அழகிய பூந்தோட்டம்.

வாழ்த்துக்கள்

ஊரோடி பகீ

15. வாழ்த்துக்கள் குட்டிப்பெண்ணே!

16. வாழ்த்துக்கள் அஞ்சலி.
இப்போதுதானம்மா உன் ‘ஒரு காசில்லாத பிள்ளை’ கதை படித்தேன்.
நல்ல இருந்தது.
சின்ன வயதில் நிறைய திறமைகள் உனக்கு.
ஊக்கம் கொடுக்கும் உன் அம்மாவுக்கும் நன்றி.
தொடர்ந்து எழுதி வரவும்.
நன்றி. வணக்கம்.

17. வாழ்த்துக்கள் அஞ்சலிக் குட்டி.
நல்லாய் எழுதியிருக்கிறீங்கள். தொடர்ந்து எழுதுங்கோ.

18. அன்பு அஞ்சலி,
பூங்காவுல வந்த உன் கதை, படம் எல்லாம் பார்த்தேன். எல்லாம் நல்லா இருக்கு. காசில்லாத பிள்ளை கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. இது மாதிரி நீ தொடர்ந்து நிறைய விஷயம் செய்யணும்.

அஞ்சலிக்கு உதவும் அவர்கள் அம்மாவுக்கு, பாராட்டத்தக்க காரியமாக உங்களுக்காக வலை பதியுறீங்க..இதை ஊக்குவிக்கிற பூங்கா இதழையும் பாராட்டணும்..இந்த வயசுல நம்ம படைப்பு இதழ்ல வந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்ணு நான் அனுபவத்துல உணர்ந்து இருக்கேன். ஒரே ஒரு சின்ன விஷயம் – அஞ்சலி சொல்லுற கதைல நிறைய ஆங்கிலம் இருக்கு. அத நீங்க மறைக்காம போடுறது நல்ல விஷயம். அப்ப தான் ஒரு குழந்தையோட மனசில் சொற்றொடர்கள் எப்படி உருவாகுதுன்னு புரிஞ்சுக்க முடியுது. அஞ்சலி செய்யுறத தொடர்ந்து திருத்தாம அப்படியே போடுங்க..முடிஞ்சா அஞ்சலியவே நேரடியா கதை சொல்லச் சொல்லி ஒலிப்பதிவா போடுங்களேன். அவளுக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும். ஆனா ஒன்னு, அவளக்கு நல்ல பல தமிழ் சொற்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள். போகப் போக அவளுடைய ஆங்கில சார்பு குறைஞ்சா நல்லா இருக்கும். புலம்பெயர்ந்த நாட்ல இவ்வளவு அழகா நீங்க உங்க பிள்ளைக்கு தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறத கண்டு மகிழ்ச்சி

19. நன்றிகள் றெனிநிமால் அங்கிள்.

20. எனக்கு வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்.

21. அஞ்சலி, உன்னோட பதிவுல எனக்குப் பிடிச்ச எல்லாத்தையும் நான் இங்க சேர்த்து வைச்சிருக்கேனே..

http://www.google.com/reader/shared/user/01967135629435145697/state/com.google/broadcast

நீயும் வந்து பார்க்குறியா?

நீ கதை சொல்லுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நிறைய கதை சொல்லு.

அஞ்சலியின் அம்மாவுக்கு,
அஞ்சலி கதை சொல்வதை நீங்கள் ஏன் ஒரு videoblogஆக போடக்கூடாது? google video, you tube இதற்கு உதவும். ரொம்ப நாள் கழிச்சு என் மனசுக்கு இதமா இருக்க வலைப்பதிவா இது இருக்கு..தொடர்ந்து வலைபதியுங்க

22. வாழ்த்துக்கள் அஞ்சலி.

இந்த சின்ன வயசிலேயே நல்லா எழுதுறீங்க. இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

23. அஞ்சலியின் அம்மா எழுதுவது….. நன்றி ரவிசங்கர்!

நானும் வீடியோவா போடவேண்டும் என்றுதான் யோசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு அதை செய்வதற்கு கொஞ்சம் எல்லாம் தேடிப் பார்க்கவேண்டும். தவிர, நேரமும் வேண்டும். விரைவில் முயற்சி செய்து போடுகிறேன்.

24. நன்றிகள் ரவிசங்கர் அங்கிள், ஜி அங்கிள்.

25. இந்த ஆண்டின் சிறந்த வலைப்பதிவர் தேர்வுக்கு உன்னை இங்க –
http://surveysan.blogspot.com/ – நியமிச்சிருக்கேன்.

தமிழ்ச் சிறுவர்களில் வலைப்பதிவதில் நீ தான் முன்னோடி என்பது முதற்காரணம். தவிர, நீ கதை சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

26. பொன்ஸ் ஆன்ரி!

&&பூங்காவில், குழந்தைகள் பெற்றோருக்கான விளையாட்டுப் பயிற்சிகளும் வருகின்றன. அம்மாவைப் படிச்சிப் பார்க்கச் சொல்லுங்க..&&

அது எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா??

27. //அது எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?? //

அஞ்சலி, அம்மாவிடம் சொல்லி இருக்கிறன்.. சொல்லுவார்கள்..

Leave a response

Your response:

Categories