Posted by: அஞ்சலி | November 30, 2006

ஒரு காசில்லாத பிள்ளை!!

ஒரு காசில்லாத பிள்ளை!!

(‘ஒரு ஏழைச் சிறுமி!!’ என்பதைத்தான் அஞ்சலி தன்னுடைய தமிழில் சொல்லியிருக்கிறா)

இந்தியாவில, ஒரு சின்ன ஊரில ஒரு பிள்ளை இருந்தா. அவவுக்கு பேர் மாலா. அவவுக்கு ஸ்கூலுக்கு போகேக்கை ஒருநாள் ஒரு மியூசிக் காதில கேட்டுது. அது நல்லா இருந்துது. அவவுக்கு அந்த மியூசிக் எந்த instrument ல இருந்து வருதெண்டு தெரியேல்லை. அவ அந்த சத்தம் வந்த இடத்துக்கு போனா. அங்க அந்த சத்தம் ஒரு ரேடியோவில இருந்து வந்தது. அவ அங்க இருந்த lady யிட்ட, இது என்ன instrument என்று கேட்டா. அவ சொன்னா, ‘இது வீணை’ எண்டு.

மாலாவுக்கு அந்த வீணை வாசிச்சு பழகவேணும் என்று ஆசையாயிருந்தது. அவ அந்த லேடியிட்ட கேட்டா, “உங்களுக்கு இது சொல்லித் தாற டீச்சர் தெரியுமா?” என்று. அவ தனக்குத் தெரியாது என்று சொல்லிட்டா. அதுக்குப் பிறகு மாலா வீட்டுக்குப் போய், அம்மா, அப்பாட்ட கேட்டா “நான் வீணை பழகலாமா?” எண்டு. அதுக்கு அம்மாப்பா சொல்லிச்சினம் “நீங்க கட்டாயம் பழகலாம். ஆனால் எங்களிட்ட வீணை வாங்க காசில்லை” எண்டு.

அதுக்குப் பிறகு மாலா வீணை பழக்கிற ஒரு டீச்சரை கண்டு பிடிச்சிட்டா. அப்பா, அம்மாவோட போய் அந்த டீச்சரிட்டை “நான் வீணை பழகலாமா?” என்று கேட்டா. அதுக்கு டீச்சர் “அதுக்கு முதலில நீங்க ஒரு வீணை வாங்க வேணும்” என்று சொன்னா. மாலா தன்னட்டை காசில்லை எண்டு சொன்னா. அப்ப டீச்சர் சொன்னா “அப்பிடியெண்டா நீங்க என்ரை வீட்டுக்கு வந்து பழகுங்கோ. நான் உங்களுக்கு என்ரை வீணையில சொல்லித்தாறன்” எண்டு.

மாலாவுக்கு நல்ல சந்தோஷம். அவ நல்லா வீணை எல்லாம் பழகி, நல்லா வாசிக்க பழகிட்டா. பிறகு ஒருநாள் ஸ்கூலில ஒரு ப்ரோக்ராம் வைச்சாங்க. அதில மாலா வீணை வாசிச்சா. அதை ஒரு பணக்காரனும் இருந்து கேட்டார்.

பிறகு ஒருநாள் அந்தப் பணக்காரன் மாலா வீட்டுக்கு வந்து அவையளோட கதைச்சார். “நீங்க நல்லா வீணை வாசிக்கிறீங்க. நீங்க ஒருநாளைக்கு வீணையில queen ஆகுவீங்க.” எண்டு மாலாவுக்கு சொன்னார். மாலா அதுக்கு, “தாங்க்ஸ். ஆனால் எனக்கு நல்லா வீட்டுல ப்ரக்டீஸ் பண்ண வீணை வாங்க காசில்லை” எண்டு சொன்னா. அவர் அதுக்கு நான் ஹெல்ப் பண்ணலாம் என்று சொல்லி விட்டு போனார்.

பிறகு ஒருநாள் மாலாவுக்கு Post office ல இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதுல ‘உங்களுக்கு ஒரு பெரிய parcel வந்திருக்கு. அதை soon as possible வந்து எடுங்க.’ எண்டு இருந்தது. மாலாவும் என்னவா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே அங்க போய் parcel எடுத்தா. அது நல்ல பெரிசா இருந்தது. அதை திறந்து பார்த்தால், அதுக்குள்ள நல்ல வடிவான ஒரு பெரிய வீணை இருந்தது. அவவுக்கு நல்ல சந்தோஷம்.

அதுக்குப் பிறகு அவ நல்லா வீணை பழகி, இந்தியாவிலேயே நல்ல famous ஆ வந்திட்டா

Responses

1. நல்ல கதை..

பார்சல் அனுப்பிச்சவருக்கு ஒரு நன்றி

2. அஞ்சலியின் கதையிலே அவவே “ஒரு காசில்லாத பிள்ளை” என்று சொன்னபின்னால், நீங்கள் (இப்பதிவினை உட்புகுத்துகிறவர்) ஏன் “ஒரு ஏழைச்சிறுமி” என்று சொல்கிறீர்கள்? எனக்கு “ஒரு காசில்லாத பிள்ளை” என்பது உங்களின் “ஒரு ஏழைச்சிறுமி” என்ற பதம் தெளிவாகப் புரிந்தது. சிலருக்குப் புரியாவிட்டால், அவர்கள் கேட்கட்டுமே? ஏன் குழந்தையின் அழகான சொல்லோட்டத்திலே குறுக்கிடுகிறீர்கள்? தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மயூரேசன் ‘சாக்லேட்’, ‘நர்சரி’ என்று போட்டு கதை எழுதுகிறார்; ஆனால், அவருடைய அம்மா கதைப்பது கதைக்குள்ளே வரும்போது, “சொக்கிலேட், நேர்சரி” என்று விழுத்துகிறார். நீங்கள் ‘ஏழைச்சிறுமி’ என்று சொல்கிறீர்கள்? For Whom the Bells Toll? இப்படியான செயற்பாடு அஞ்சலியை இழிபடுத்துவதாக மட்டுமே இருக்கமுடியும்.

3. பெயரிலிக்கு அஞ்சலியின் அம்மா எழுதுவது…..

நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறேன். அதேவேளை நான் அவ்வாறு எழுதியதன் காரணத்தையும் இங்கே குறிப்பிடுவது நல்லதென நினைக்கிறேன். அஞ்சலிக்கு புதிய அழகான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளச் செய்வதற்கும், வேறொரு நாளில் அஞ்சலி இதை வாசிக்கும்போது, ‘காசில்லாத பிள்ளை’ என்பதை, இன்னும் அழகாக தமிழில் ‘ஏழைச் சிறுமி’ என்றும் சொல்லலாம் என்பதை நினைவில் கொள்ளலாம் என்பதால்தான். எனவே தவறாக நினைக்க வேண்டாம்.

4. அஞ்சலியின் அம்மா.
மன்னிக்கவேண்டும்; பதிவு நீங்கள் – உங்களின் மகளின் கதையிலே – இடுவது; நான்தான் எட்டிப் பெருவிரலை வைத்துவிட்டேன் என வேண்டும். அதனால், நீங்கள்தான் தவறாக எண்ணக்கூடாது. அவ
“ஏழைச்சிறுமி” என்ற நல்ல சொல்லைப் புரிந்துகொள்வதுதான் உங்கள் நோக்கு என்றால், எனது கருத்துக்காக மன்னிக்கவேண்டும். ஆனால், அப்படியாகப் பார்த்தால், ‘லேடி’, ‘டீச்சர்’ (‘ரீச்சர்’ என்பதையா அப்படியா எழுதுகிறீர்கள்? ;-) ), ‘மியூசிக்’ என்ற சொற்களிலும்விட “காசில்லாத பிள்ளை” என்பது மிகவும் அழகான சொற்றொடர். நீங்கள் வழக்கிலே பேசாத தமிழை (நோர்வேயிலே நீங்கள் அதைத்தான் பேசுகிறீர்கள் என்ற நம்பிக்கையிலே எழுதுகிறேன்; இல்லையென்றால், இன்னொரு மன்னிப்பினைக் கேட்கிறேன்), வலைப்பதிவிலே நீங்களும் மயூரேசன் போன்றவர்களும் ஏன் திணிப்பாக எழுதுகிறீர்கள்? விகடனும் குமுதமும் கல்கியும் அருஞ்சொல்லகராதி தந்துவிட்டா, மெரீனாவின் நாடகங்களையும் சுமியின் உளறல்களையும் தந்தார்கள்? விளக்கம் தா எனக் கேட்காமல் வாசித்துத்தள்ளவில்லையா? வலைப்பதிவுகளிலும் அதே மொழியிலே எழுதுகின்றவர்கள் அருஞ்சொல் விளக்கம் தந்துவிட்டா எழுதுகின்றார்கள்? தனிப்பட எனக்குப் பட்டதைச் சொன்னேன். அவ்வளவுதான். மிகுதிப்படி, அஞ்சலி, மழலை, இப்போது மிகச்சிறிய பதிவர் ஆகியோரைத் தொடர்ந்து வாசிக்கின்றேன்; அவர்களின் உலகம் பலவிதங்களிலே பயனாக இருக்கின்றது; நாளாந்தத்தேவைக்கான உணர்தலைத் தருகிறது. அதற்கு நன்றி.

5. பெயரிலி! நீங்கள் சொல்வதும் சரிதான். எனவே தொடரும் பகுதிகளில் இவற்றை கருத்தில் கொள்கின்றேன்.

அது சரி, மயூரேசன் யார்? அவரது வலைப்பதிவின் சுட்டியைத் தர முடியுமா? மழலையின் வலைப்பதிவை பார்த்திருக்கிறேன். அஞ்சலிக்கும் காட்டி இருக்கிறேன். வேறும் சிறிய பதிவர்களிம் வலைப் பதிவுகளிருப்பின் தயவுசெய்து சுட்டியைத் தாருங்கள்.

அஞ்சலியின் அம்மா.

6. காசில்லாத பிள்ளை என்ற தலைப்பே அருமையாகத்தான் உள்ளது.

கதையும் மிக நன்றாக உள்ளது அஞ்சலி!
தொடர்ந்து எழுதவும்.

7. என்ரை கதை வாசிச்சு பதில் எழுதின முத்துக்குமரன் அங்கிள், சிபி அங்கிள், பெயரிலி அங்கிள் எல்லாருக்கும் நன்றிகள்.

8. எனது வலைப்பூவில் கிண்டர்கார்டன் பகுதியில் தொடுப்பு கொடுத்துள்ளேன்!

9. நன்றிகள் சிபி அங்கிள். பிறகு உங்களது பக்கம் போய்ப் பார்க்கிறேன்.

10. anjali kutti
kousi aunty here.iam from tamilnadu,INDIA
45 YEARS OLD SCHOOL TEACHER.I LIKE TALENTED KIDS LIKE YOU.REALLY I WISH TO TALK TO YOU OR CHAT WITH YOU.MY YAHOO CHAT ID IS KOUMOHAN.I DONT KNOW U MAY FIND FREE TIME TO CHAT WITH ME.IF WISH CAN GV UR CHAT ID IF ANY U HAVE
WITH BLESSINGS.
KOUSI AUNTY

11. Halo Koushi aunty!

Thank you very much for your comment. I don’t have any chat ID. But I have a mail ID and you can contact me in this address (alila.abi@myhome.no) and give me your phone number. If possible, I can talk to you.

Anjali

12. நால்லா இருந்திச்சு உங்கட கத.
பிறகு எப்ப கத சொல்ல வருவீங்க அஞ்சலி?

கத கேக்க ஆசையோடு

றெனி அங்கள்.

13. நன்றி றெனி அங்கிள். கெதியில வேற கதை சொல்லுறன். :)

14. அஞ்சலியின் அம்மா:
காலம் தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவேண்டும். மயூரேசன் சிறுவர் அல்லர். வளர்ந்தவர்; களனிப்பல்கலைக்கழகத்திலே கற்கிறார். வேறு குழந்தைகள் பதிவுகளின் இணைப்பு வரும்போது, அனுப்பி வைக்கிறேன்.

15. அஞ்சலி,

உங்களுக்கு நான் முன்பு ஒரு பின்னூட்டம் போட்டேன். அதை இடையில் எந்தப் பூனைக்குட்டியோ வந்து எடுத்துக்கொண்டு போயிட்டுது. ‘ஒரு காசில்லாத பிள்ளை’ நல்ல அரும்…ம்மையான கதை. எனக்கு நல்லாப் பிடிச்சிருந்துது. நீங்கள் வாழுற நோர்வேயைப் பற்றியும் எழுதினால் நாங்கள் தெரிஞ்சுகொள்ளுவோம் அல்லவா… உங்களுக்கு நல்ல உற்சாகமூட்டுற அம்மா கிடைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம். நல்லாப் படிக்கிறதோடை இடையிடையே வந்து எங்களுக்குக் கதையும் எழுதுங்கோ. வாசிக்கப் பாத்துக்கொண்டிருக்கிறம்.

16. உங்கட பூனைக்குட்டி ஜோக் நல்லா இருந்துது. உங்கட பதிலுக்கு நன்றி.

நோர்வேயைப் பற்றி இன்னொரு நாளைக்கு எழுதுவன். இன்னொருநாள் கதையும் சொல்லுறன்.

17. முதலில் அஞ்சலிக்கும் அவர் அம்மாவிற்கும் வாழ்த்துக்கள்….

அப்பாவி மயூரேசன் இங்கே இழுபட்டு இருக்கின்றார்… நீங்கள் உங்களுக்கு விருப்பமானதைப் பயன் படுத்துங்கள் உங்களுக்கு ஏற்ற நடையில் எழுதுங்கள்.. பெயரைக் கூட காட்டாத யாரையும் நீங்கள் சட்டைசெய்ய வேண்டியதில்லை!!!

அன்புடன்,
மயூரேசன்.
http://thamizhblog.blogspot.com

18. நன்றி மயூரேசன் அண்ணா!

Leave a response

Your response:

Categories