நான் செய்த சலாட்!!
நேற்று இரவு சாப்பாட்டுக்கு நான் சலாட் போடப் போறதா அப்பா, அம்மாட்ட சொன்னேன். அவங்களும் சரியெண்டு சொன்னாங்க. உடனேயே, (நானே) ஒரு ரெசிப்பி எழுதினேன். அது இதுதான்.
2 pieces of carrots
4 pieces of cucumber
1 tomato
6 spoons curd
2 spoons salt
நான்தான் சலாட் செய்தேன். அம்மா எனக்கு எல்லாம் கழுவி, வெட்டித் தந்து உதவி செய்தாங்க.
எல்லாத்தையும் எடுத்து முதலில் கழுவி எடுத்தோம். கரட் எடுத்து சின்ன சின்ன துண்டா வெட்டி எடுக்க வேணும் என்று சொன்னேன். அம்மா “கரட் ஸ்க்ரேப் பண்ணி எடுத்தால் இன்னும் நல்லாயிருக்குமே” என்று சொன்னார். அதுவும் சரிதான் என்று ஸ்க்ரேப் பண்ணி எடுத்தோம். பிறகு cucumber ஐ எடுத்து 4 துண்டையும், இன்னும் சின்ன சின்ன துண்டா வெட்டி எடுத்தோம். தக்காளியையும் நல்ல சின்னச் சின்ன துண்டா அம்மா வெட்டித் தந்தாங்க.
பிறகு அது எல்லாத்தையும் ஒரு டிஷ்ஷில போட்டு, அதற்குள் தயிர் எடுத்துப் போட்டேன். கரட் கூடிப் போச்சு போல இருந்ததால, 6 ஸ்பூனை விட கூட தயிர் போட்டேன். பிறகு அம்மா அளவா உப்பு போட்டுத் தந்தாங்க. எல்லாத்தையும் ஸ்பூனால நல்லா கிண்டி சேர்த்தேன். நல்ல சலாட் ரெடியாச்சு.
பிறகு எல்லாரும் சாப்பிட்டோம். நான் செய்த சலாட் நல்லா இருந்தது எண்டு அப்பா, அம்மாவும் சொன்னாங்க. எனக்கும் அது நல்லா இருந்தது, அதால நானும் நேற்று நிறைய சாப்பிட்டேன்.
அம்மா, அப்பாட்ட சொன்னேன் “இண்டைக்கு சலாட் நல்லா இருந்ததால நிறைய சாப்பிட்டு விட்டேன். அதால வயித்துல வலிக்குது”. அப்பா, அம்மா கேட்டாங்க “அப்ப இவ்வளவு நாளும் நாங்க செய்த சாப்பாடெல்லாம் நல்லா இருக்கேல்லையா?”. நான் சொன்னேன் “அதுவும் நல்லாத்தான் இருந்தது. இதுவும் நல்லாத்தான் இருந்தது” என்று.
(அம்மா இந்த சலாட்பத்தி இங்க எழுதலாம் என்று நேற்றே சொல்லாத படியால, அந்த சலாட் photo எடுத்து வைக்க மறந்து போனேன். இன்னொரு முறை நான் சலாட் செய்யும்போது, அந்த படம் எடுத்து போடுவேன்).



சமர்த்து அஞ்சலிக்கு வாழ்த்துக்கள்.
சலாட் சாப்பிட்டது போலவே இருந்தது..
By: G Gowtham on November 27, 2006
at 9:51 am
நல்ல சலாட் போல இருக்கே! நானும் செய்து பாக்கணும்
By: திரு on November 27, 2006
at 9:53 am
அஞ்சலி!
சலாட் போட்டீங்களா??? கெட்டிக்காரி….அப்படியே!!!அம்மாவிடம் கூழும் காச்சுவது எப்பிடி என்று கேட்டுப் பழகிவைக்கவும்.
நோர்வேயில் நல்ல நண்டு மீன் கிடைக்கும். நீங்கள் மாமிசம் சாப்பிடுவீர்கள் என நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்
By: johan-paris on November 27, 2006
at 10:18 am
நன்றிகள் கெளதம் அங்கிள், திரு அங்கிள், யோஹன்-பரீஸ் அங்கிள்.<br /><br />அம்மாவுக்கும் கூழ் சாப்பிட விருப்பமாம். ஆனால் காச்ச தெரியாதாம்.
By: அஞ்சலி on November 27, 2006
at 3:44 pm
“சாலட் செய்வது எப்படி”னு தலைப்பிட்டிருந்தா தமிழ்மணத்தில் பிச்சிக்கிட்டுப் போயிருக்கும்
By: சேதுக்கரசி on November 28, 2006
at 8:06 am
அடட! விளையாட்டில் மாத்திரமில்லாமல் சாப்பாட்டிலும் அசத்துகின்றீர்களே அஞ்சலி.
நான் ஒன்றும் நினைக்கவில்லை எதற்கும் அம்மாவிடம் சொல்லி ஒரு முறை திஸ்டி சுற்றிக் கொள்ளவும்!
ஹி ஹி ஹி…
கெட்டிக்காரி அஞ்சலி.
அன்புடன்
றெனி அங்கிள்.
By: றெனிநிமல் on December 4, 2006
at 6:24 am
நன்றி றெனி அங்கிள். அம்மா அது எல்லாம் சுத்த மாட்டாவாம்.
By: அஞ்சலி on December 4, 2006
at 11:36 am
By: செந்தில் குமரன் on December 4, 2006
at 12:23 pm
அஞ்சலி!
என் பிளக் சரியானதும்; கூழ் காச்சுவது எப்படி??என ஓர் பதிவிட்டு விடுகிறேனே!.
யோகன் பாரிஸ்
By: Johan-Paris on December 4, 2006
at 3:50 pm