My animal project!!
எங்களுக்கு வகுப்பில டீச்சர் ஒரு ப்ரொஜெக்ட் தந்தார். எல்லோரும் ஏதாவது ஒரு மிருகம்பற்றி நிறைய வாசிச்சு எழுதி ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேணும்.
நான் முதலில Giraffe பற்றி எழுதத்தான் இருந்தேன். அம்மா, அப்பா சொன்னாங்க எல்லோருக்கும் சரியா தெரியாத ஏதாவது ஒரு மிருகம்பற்றி எழுதலாமே என்று. அதுவும் நல்ல ஐடியாவா இருந்தது. என்ன மிருகம்பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் இந்த முறை ஜேர்மனி போன நேரம் Hannover zoo வில பார்த்த அந்த மிருகம் நினைவு வந்தது. அதுக்கு பேர் எனக்கு முதலில தெரியாது. பிறகு இங்க blog ல அந்த படம் பார்த்து Johan-Paris அங்கிள்தான் அதுக்கு பெயர் எழுதி இருந்தார். அதுக்கு பேர் alpaca.
அதனால அந்த மிருகம்பற்றி எழுதலாம் என்று decide பண்ணினேன். (Thanks to Johan-Paris uncle - பெயர் சொல்லி தந்ததுக்கு). இண்டெர்னெட் ல, வேற புத்தகத்துல எல்லாம் தேடி எழுதினேன். அப்பா, அம்மாவும் அது எல்லாம் தேடி எழுத ஹெல்ப் பண்னினாங்க. இங்கே நான் எழுதின அந்த ப்ரொஜெக்ட் english ல இருக்கு. பாருங்கோ. அல்பகா பற்றி நான் எழுதின poem எப்படி இருக்கு என்றும் சொல்லுங்கோ. 





Posted by: அஞ்சலி | October 13, 2006
அல்பகா (Alpaca)!!
Posted in எனது ஆக்கங்கள்




நிறைய தகவல்கள் தந்ததற்கு பாராட்டுக்கள் அஞ்சலி..
படங்களும் விளக்கங்களும் அருமை
By: நிலவு நண்பன் on October 14, 2006
at 11:17 am
உங்க ரிப்போர்ட் ரொம்ப நல்லா இருக்கு என்ன கிரேட் கொடுத்தாங்க?
By: செந்தில் குமரன் on October 14, 2006
at 12:13 pm
அழகா இருக்கு குட்டி!
By: ramachandranusha on October 14, 2006
at 1:21 pm
dear anjali nicemma…………
keep writing kanna
By: sweety on October 14, 2006
at 3:06 pm
dear anjali nicemma…………
keep writing kanna
By: sweety on October 14, 2006
at 3:14 pm
எல்லோருக்கும் நன்றிகள். என்னுடைய டீச்சர் இன்னும் அந்த ரிப்போர்ட் பார்த்து தரவில்லை. கிரேட் கிடைத்ததும் சொல்லுறேன்.
By: அஞ்சலி on October 14, 2006
at 5:21 pm
Dear Anjali!
I read your project about ALPACA.
It is very intersting.
I like to tell you,JOHAN PARIS is my grand father .Now he is with me
in London,for his holidays.
Sorry,I could not write in TAMIL.
Abiramy Neduncheliyan
London
By: Johan-Paris on October 16, 2006
at 5:30 am
Thanks for your comment. I’m Anjali Abirami. So, we both have same name
.
By: அஞ்சலி on October 16, 2006
at 5:34 am
அடேயப்பா!! இவ்வ்வளவு தகவல் தேடியெடுத்து ஒப்படை செய்தனீங்களா.. கெட்டிக்காரி. :O)
எங்களும் ‘அல்பகா’வைப் பற்றிச் சொன்னதுக்கு நன்றி அஞ்சலிக்குட்டி.
எனக்கு huacayaஐ விட suri பிடிச்சிருக்கு. அதிட உடம்பில இருக்கிற உரோமத்தை வடிவா ப்ரஷ் பண்ணலாம் போல இருக்கு. :O))
By: `மழை` ஷ்ரேயா(Shreya) on October 16, 2006
at 12:57 pm
நல்ல கட்டுரை குட்டி ! மூன்றாவது கிரேடிலேயே இத்தனை தகவல்களா ? பாராட்டுக்கள்!!
By: மணியன் on October 16, 2006
at 2:33 pm
Thanks anty and uncle.
By: அஞ்சலி on October 16, 2006
at 6:44 pm
அல்பகாப் பற்றி அழகாய் விளக்கமும்
நல்ல படங்கள் நாலைந்தும்! சொல்லும்
திறன்மிக நன்று.உன் திறமை வளர்ந்து
சிறக்கட்டும் நன்மை சேர்ந்து.
By: FloraiPuyal on October 17, 2006
at 12:33 pm
நன்றி.
By: அஞ்சலி on October 17, 2006
at 1:42 pm
ஹாய் அஞ்சலி.
நலமாக இருக்கிறீர்களா?
அடடா!அல்பகாவைப் பற்றி நானும் நிறையவே தெரிந்து கொண்டேன்.
கெட்டிக்காரி அஞ்சலி.
அன்புடன்
றெனி அங்கிள்.
By: றெனிநிமல் on October 22, 2006
at 8:07 am
Simple as well as Nice Blog. Congratss!!!
By: Raja Shanmugam on October 22, 2006
at 4:41 pm
vow …..wonderful!
By: abdullah on October 23, 2006
at 5:04 am
அஞ்சலி,
அழகான பாட்டு. நல்ல படமும் வரைஞ்சிருக்கீங்க.
ஆமா, அல்பகாவோட
கம்பளியை வச்சு உடையெல்லாம் தைப்பாங்களா?
By: சுந்தரவடிவேல் on October 23, 2006
at 4:05 pm
நன்றி றெனி அங்கிள், ராஜா அங்கிள், அப்துல்லா அங்கிள், சுந்தரவடிவேல் அங்கிள்.<br/><br/>ஆமா! அல்பகாவுடைய கம்பளியில் இருந்து உடை எல்லாம் தைப்பாங்க. அந்த கம்பளி sheep கம்பளியை விட soft and strong. அதோட warm ஆ இருக்கிறதால குளிருக்கு அந்த உடுப்பு நல்லா இருக்கும். அதோட அந்த கம்பளி weight உம் குறைவா இருக்கிறதால, போட்டிருக்க பாரமுமில்லாமல் இருக்குமாம்.
By: அஞ்சலி on October 23, 2006
at 4:20 pm