March of the penguins!!
இந்த படம் (documentary film) நானும், அப்பாவும், அம்மாவும் பார்த்தம். இந்த படம் emperor penguins பற்றின படம்.
அது ஒரு நல்ல படம். பென்குவின்ஸ் எல்லாம் baby பிறக்கிறதுக்கு கன தூரம் நடந்து நடந்து போகினம். நிறைய தூரம் நடக்கினம். அங்க போய், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு partner தேடி பிடிச்சு family ஆகிட்டினம்.
பிறகு அம்மாக்கு முட்டை வந்தது. அவையள் நிறைய நாள் சாப்பிடாமல் இருந்தவை. அங்க நல்ல குளிரும் இருந்தது. பிறகு முட்டையை அப்பாட்ட குடுத்துட்டு, அம்மா எல்லாம் சாப்பிட போயிட்டினம். சாப்பிடுறதுக்கு திருப்பியும் நிறைய தூரம் நடந்து நடந்து போனவை. அப்பா எல்லாரும் முட்டையையும் வைச்சுக் கொண்டு நல்ல குளிருக்குள்ள நிக்கினம். பாவமாயிருந்தது.
அப்பாட்டை இருகேக்கை முட்டை பொரிஞ்சுட்டுது. அந்த குஞ்சுக்கு அப்பா வாயில இருந்து ஏதோ சாப்பாடு கொடுத்தார். பிறகு கொஞ்ச நாளில அம்மா எல்லோரும் திரும்பி வந்தவை. குஞ்சு அம்மாட்டை போய் வாயில இருந்து பால் வாங்கி குடிச்சுது. பிறகு குஞ்சை அம்மாக்களோட விட்டுட்டு, அப்பா எல்லாரும் சாப்பிட நடந்து போயிட்டினம். அவையளும் திருப்பி நிறைய தூரம் நடந்து நடந்து போகினம்.
சில குஞ்சு குளிரில செத்துப் போச்சுது. செத்துப்போன குஞ்சோட அம்மா பாவம். வேற அம்மாட்டை இருந்து மற்ற குஞ்சை பறிக்க பார்த்தது. ஆனால் அந்த அம்மா குடுக்கேல்லை. சில குஞ்சை eagle உம் வந்து கொத்திச்சுது. பாவம் குஞ்சு.
பிறகு அப்பாவும், அம்மாவும் மாத்தி மாத்தி குஞ்சை பார்த்துக் கொண்டினம். மாத்தி மாத்தி சாப்பிட போச்சினம். ஒவ்வொரு முறையும் நிறைய தூரமாக நடந்து நடந்து போகினம்.
கடைசியில அந்த குஞ்சு எல்லாத்தையும் தனியா விட்டுட்டு அப்பா, அம்மா எல்லாருமே போயிட்டாங்க. எனக்கு அழுகை அழுகையா வந்தது. அந்த குஞ்சுகள் எல்லாம் பாவம்தானே? அவையளுக்கு தனியா இருக்க பயமா இருக்கும்தானே? அவையள் தனிய போனால், seal எல்லாம் பிடிச்சு சாப்பிட்டுடும்தானே? அவையளுக்கு seal இட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதெண்டு தெரியாதுதானே? நான் அழத் தொடங்கி விட்டன். பிறகு அம்மாவும், அப்பாவும் சொன்னாங்க, அவங்களாவே எப்படி தப்பிக்கிறதெண்டு பழகிடுவாங்க எண்டு. பிறகு பார்த்தால், ஒருதரும் சொல்லிக் குடுக்காமலே அந்த குஞ்சுகள் எல்லாம் தாங்களாவே தண்ணியில போய் splash splash என்று அடிச்சுக் கொண்டு, நீந்தி நீந்தி போனாங்க. அது பார்க்க நல்ல வடிவாயிருந்தது.
(எனக்கு PC யில இருந்து நேரடியாக படங்களை இங்கே இணைக்க முடியாமல் இருக்கு. உதாரணத்துக்கு இங்கே போட்டிருக்கிற படம் 8kb. இதை Add image இல் போய் add பண்ணியபோது Done என்று வருகிறது. ஆனால் படம் இங்கே தெரியவில்லை. முன்பு எல்லாம் இப்படி செய்தபோது படம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பொது வரவில்லை. ஏன் என்று யாராவது சொல்லித் தருவீர்களா?
அஞ்சலியின் அம்மா).



march of the penguins ஆஸ்கார் வாங்கிய படம் தெரியுமா? டாக்குமெண்டிரி பிரிவில் சிறந்த டாக்குமெண்டிரிக்கான ஆஸ்கார் விருது பெற்றது.
உங்களைப் போன்றே சில சமயம் பிளாக்கர் சொதப்பலை நானும் சந்தித்துள்ளேன். சில சமயம் இப்படி நிகழும் பொழுது edit html viewவில் சென்று பார்த்தால் லிங்க் தெரியும்.
இந்த சொதப்பலகளுக்கு பதில் imageshack, photobucket போன்றவைகளை உபயோகப் படுத்துவது நலம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே சென்று பார்க்கலாம். வலைப் பதிவாளர் ஒருத்தர் இதனைப் பற்றி அங்கே எழுதி வருகிறார்.
http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_115806592699666235.html
By: செந்தில் குமரன் on September 13, 2006
at 11:26 am
நானும் இந்த படத்தை பார்த்த திருப்தி. எங்கேயா? அது தான் உங்கட பதிவுல தான்!
By: திரு on September 14, 2006
at 5:08 am
Oscar award கிடைத்த படம் என்று அப்பா சொன்னார்.<br/><br/>நன்றி திரு அங்கிள்.
By: அஞ்சலி on September 16, 2006
at 8:48 am
அஞ்சலி, இன்னைக்குத் தான் இந்த படம் பார்த்தேன். உங்களை மாதிரியே எனக்கும் இந்தப் படம் ரொம்பப் புடிச்சிருந்தது. கடைசியில் குஞ்சுகள் எல்லாம் வந்து நடக்குறதைப் பார்க்க நல்ல வடிவா இருந்தது.
By: ரவிசங்கர் on May 13, 2008
at 3:31 pm
அஞ்சலி, எனக்கு அழுகை வரவில்ல எண்டாலும் படம் பாத்துமுடிக்கையில், மிகவும் சோகமாக இருந்துச்சு. ஒரு குஞ்சு வளர ஒரு கூட்டமே எவ்வளவு பாடுபட வேண்டியதாக இருக்கு இல்ல. பென்குவின்களை போலவே உங்கள் எழுத்து நடை மிகவும் வடிவாக இருக்கு
By: Grenouille on May 14, 2008
at 11:36 am