Posted by: அஞ்சலி | September 10, 2006

Hannover Zoo!!

ஜேர்மனியில் இருந்தபோது ஒருநாள் ஹனோவர் மிருகக் காட்சிச்சாலைக்கும் போனோம். அங்கே நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அனிமல்ஸ், பேர்ட்ஸ் எல்லாம் பார்த்தோம். எனக்கு அனிமல்ஸ், பேர்ட்ஸ் எல்லாம் திருப்பி திருப்பி பார்க்க நல்ல்ல்ல்ல விருப்பம். அங்கே நிறைய படங்களும் அப்பா எடுத்தார். அதுல சிலது மட்டும் இங்கே போடுறேன்.

அங்கே wild animals, farm animals எல்லாமே இருந்தது. கிளி, பாம்பு, குரங்கு, skunk எல்லாம் வைச்சு ஒரு show இருந்தது. எல்லாம் அவங்க சொல்லுற மாதிரியே செய்தாங்க. அதே மாதிரி farm animals வைச்சு இன்னொரு show வும் இருந்தது. பிறகு sea lion, seal, penguin எல்லாம் வைச்சும் ஒரு show பாத்தம். அவங்க எல்லாம் தண்ணியுக்குள்ளால நல்ல விளையாட்டெல்லாம் காட்டினாங்க.

Photobucket - Video and Image Hosting
கொண்டை வைச்ச பறவை

Photobucket - Video and Image Hosting
Flamingo பறவைக் கூட்டம் நல்ல வடிவா இருந்தது.

Photobucket - Video and Image Hosting
King and queen of the jungle

Photobucket - Video and Image Hosting
யானைக்குட்டி பார்க்கவே ஆசையா இருந்துது.

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
விதம் விதமா ஆடுகள் எல்லாம் இருந்தது. கிட்ட போய் தொட்டுப் பார்க்கலாம். அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் குடுக்கலாம்.

Photobucket - Video and Image Hosting
குட்டி குட்டி மிருகங்கள் எல்லாம் குட்டி குட்டி வீட்டுக்குள்ள வைச்சிருக்கிறாங்க.

Photobucket - Video and Image Hosting
Sea animal show

Photobucket - Video and Image Hosting
Farm animal show

Photobucket - Video and Image Hosting
எப்படி இருக்கு என்னுடைய jump?

Chimpanzees, wolves, Giraffes, Hippopotamus, Kangaroos, Zebras, Pelicans, Ostrich இப்படி நிறைய்ய்ய்ய்ய்ய்ய அங்கே பார்த்தோம்.

Responses

1. பயண அனுபவங்களையும், புகைப்படங்களையும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அஞ்சலி!

2. அஞ்சலி!
படங்கள் எல்லாமுமே அருமையா இருக்கு. ஹேனோவர் எல்லாம் போக வாய்ப்பில்லாத எங்களுக்கு நல்ல விருந்தா அமைஞ்சது உங்க படங்கள்.

மிருகங்களோட பேரையும் போட்டுருந்தீங்கன்னா இன்னும் நல்லாருந்து இருக்கும் என்பது என்னோட சின்ன கருத்து. உதாரணத்திற்கு நீங்கள் தொட்டுப் பார்த்து கொண்டிருக்கும் அந்த வெள்ளை நிற ஆட்டின் பெயர், அந்த கறுப்பு ரோமம் கண்ட விலங்கின் பெயர் இவையெல்லாம். இவையெல்லாம் நாங்கள் இதற்கு முன் பார்த்ததேயில்லை

3. அஞ்சலி!
உங்கள் மிருகக்காட்சி உலா படங்களுடன் நன்றாக உள்ளது. தொலைக்காட்டியில் நான் விரும்பிப்பார்ப்பதே! மிருகங்கள் பற்றிய விவரணச் சித்திரமே!
கைப்புள்ள அண்ணாவுக்கு!
1 படம் ஓர் ஜப்பானிய நாரைவகை;ஆபிரிக்காவிலும் காணப்படும். இடம் பெயரும் தன்மையுடையவை.
5 படம் இது ஓர் வெள்ளாட்டுவகையே! அடுத்த செம்மண் நிறமும் (கொம்புடன் கூடியவை)அதே வகையே!; கலப்பற்ற பழைய ஐரோப்பிய இனங்கள். பாலுக்காகவும் இறைச்சிக்காவும் ஐரோப்பிய நாடுகளில் பட்டிபட்டியாக வளர்க்கிறார்கள்.
6 படம் அல்பகா(ALPACA) எனும் உரோமம் நிறைந்த ,தென்னமெரிக்க ஆட்டினமே!; இது லமா(LLAMA) விலும் சிறியது.
10 படம் லமா(LLAMA) தென்னமரிக்கா மலைவாழ் ஆட்டினம்; உரோமம் இறைச்சி,தோலுக்காக வளர்க்கிறார்கள். அதன் முதுகில் நம்ம வெள்ளாட்டு அண்ணாச்சி!
யோகன் பாரிஸ்

4. படம் எல்லாம் சூப்பர். அதை விட உங்க ஜம்ப் சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்.

5. மிருகங்களின் பெயர்களைத் தெரியத் தந்தமைக்கு மிக்க நன்றி யோகன் ஐயா.

அஞ்சலி இனி அந்த மிருகங்கள் பேரை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

6. கலக்கல் அஞ்சலி! படம் எல்லாம் நல்லாயிருக்கு! நிறைய மிருகங்கள், பறவைகள் எல்லாம் பார்த்திருக்கீங்க :)

உங்கட ஜம்ப் நல்ல வடிவு!

7. எல்லோருக்கும் எனது நன்றிகள்.

Zoo வில இருந்த அனிமல்ஸ், பேர்ட்ஸ் எல்லாத்துடைய பேரும் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. வாசித்ததும் சிலது மறந்து போச்சுது. :)

லாமா தெரியும். அங்கே லாமா விலயே நிறைய வேறுவேறு மாதிரி லாமா எல்லாம் இருந்தது.

அந்த ஆடுகள் இருந்த இடத்துல, எல்லா விதமான ஆடுகளையும் ஒரே கூட்டமா விட்டிருந்தாங்க. அதுனால பெயர் எல்லாம் அதுல இருக்கவில்லை.

அந்த கறுப்பு ஆட்டின் பெயர் அல்பகா என்று சொன்ன யோஹன் அங்கிளுக்கு நன்றிகள்.

8. அஞ்சலி,

படமெல்லாம் அருமை. நான் ஹேனோவருக்கு ஒருநடை போன மாதிரி இருந்தது.

அன்புடன்,

ஹரிஹரன்

9. :) நன்றிகள்.

10. //அஞ்சலி!
படங்கள் எல்லாமுமே அருமையா இருக்கு. ஹேனோவர் எல்லாம் போக வாய்ப்பில்லாத எங்களுக்கு நல்ல விருந்தா அமைஞ்சது உங்க படங்கள்.//

நான் படத்துல வடிவேலுவின் பஹிடியெல்லாம் பார்த்து சிரிப்பேன். வடிவேலு சொல்லுற “ஆஹா, வந்துட்டாய்யா வந்துட்டா” கேக்க நல்ல சிரிப்புத்தான் வரும். வடிவேலுடைய படத்துக்கும் நன்றி.

11. நான் அஞ்சலியோட கோபமாம். என்னையும் அந்த zooக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே.. நான் அந்த சிங்கத்தை தொட்டுக் காட்டியிருப்பேனே! :) )

12. நீங்க எங்கே இருக்கிறீங்க என்று தெரியவில்லையே. தெரிஞ்சிருந்தால் கூட்டிக் கொண்டு போயிருப்பேனே. :) அதுனால என்னோட கோவிக்க வேண்டாம்.

Leave a response

Your response:

Categories